முன்னாள் அக்னி வீரர்களுக்கு CAPF-ல் 10% இடஒதுக்கீடு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அக்னிபாத் திட்டத்தின் கீழ் பணியாற்றிய முன்னாள் வீரர்களுக்கு மத்திய ஆயுத போலீஸ் படையின் காவலர் பணியிடங்களில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என மத்திய உள்துறை அறிவித்துள்ளது. மேலும் உடல்திறன் தேர்வில் இருந்தும் அவர்களுக்கு விலக்கு அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. 2022 ஜுன் 14-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட அக்னிபாத் திட்டத்தின் கீழ் முப்படைகளுக்கும் பதினேழரை வயது முதல் 21 வயது வரையிலான இளைஞர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆனால் இவர்களின் பணிக்காலம் 4 ஆண்டுகள் மட்டுமே என்பதால் எதிர்க்கட்சிகள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. இந்தநிலையில்தான் நான்கு ஆண்டுகள் பணிபுரிந்து முடித்த அக்னி வீரர்களுக்கு CISF, BSF, RPF, SSP, மற்றும் CRPF உள்ளிட்ட மத்திய ஆயுதப் படைகளில் பத்து சதவீத இடஒதுக்கீட்டை மத்திய அரசு அறிவித்துள்ளது.

Night
Day